செந்தில் தொண்டமான் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம்! வாகன சாரதி பொலிஸில் சரண் - Photos

http://newsweligama.blogspot.com/2014/09/photos.html
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊவா மாகாண தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் தேடப்பட்ட வாகன சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளார்.
நேற்று மாலை பண்டாரவளை நகரில் இந்த விபத்து ஏற்பட்டது.
இதன்போது ஒருவர் பலியானார். ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட்ட 31பேர் காயமடைந்தனர். இதில் 4 பொலிஸ்காரர்களும் உள்ளடங்குகின்றனர்
பண்டாரவளை நகரில் பிரசார பேரணி ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பேரணியில் பங்கேற்றிருந்த செந்தில் தொண்டமானின் வாகனம் ஒன்றே பேரணி மீது மோதியுள்ளது.
இதனையடுத்து வாகன சாரதி தப்பிச்சென்றார்.
இதேவேளை விபத்தின் போது காயமடைந்த செந்தில் தொண்டமான் நேற்று இரவு தியத்தலாவ வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.