தம்பலகாமம் பகுதியில் வீசிய கடும் காற்றினால் 25 வீடுகளுக்கு சேதம்
http://newsweligama.blogspot.com/2014/08/25.html
தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் இன்று மாலை நிலவிய கடும் காற்று மற்றும் பலத்த மழையின் காரணமாக சுமார் 25 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
தம்பலகாமம் மற்றும் கோவிலடி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இன்று மாலை 3.30 முதல் நான்கு மணி வரை கடும் காற்று வீசியதாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஸ்ரீபதி ஜெயகௌரி தெரிவித்தார்.
இந்த அனர்த்தம் காரணமாக சுமார் 25 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சேத விபரங்கள் தொடர்பில் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக தகவல்களை திரட்டி வருவதாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் மேலும் கூறினார்.