ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக 70,985 வாகனங்கள் மீள் ஏற்றுமதி
http://newsweligama.blogspot.com/2014/08/70985.html
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக 70,985 வாகனங்கள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன ஹம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்கப்பட முன்னர் 500 வாகனங்கள் மாத்திரமே மீள் ஏற்றுமதி செய்யப்பட்டன. எனினும். இந்நிலைமை முற்றாக மாறியுள்ளது. என நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவ ர்த்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுஜீவ சேரசிங்க எம்.பி. வாய்மொழி விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கொழும்பு துறைமுகத்தை பயன்படுத்தி வாகனங்கனை இறக்குமதி செய்வதைவிட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இறக்குமதியாளர்கள் கூடுதலாகப் பயன்படுத்துகின்றனர்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், றுஹுணு மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தின் மூலம் கடந்த ஏழு மாதங்களில் 1236 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டிருப்பதாக இவ்வருட இறுதியில் 15,000 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டுவதே அரசாங்கத்தின் இலக்காக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேநேரம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்குப் பெற்றுக் கொண்ட கடனை அரசாங்கம் மீளச் செலுத்தி வருகிறது.
இக்கடனை அரசு செலுத்தி முடிக்கும். இத்துறைமுகத்தின் இரண்டாம். மூன்றாம் கட்டப் பணிகள் பூர்த்தியடைந்ததும் மேலும் வருமானத்தை ஈட்ட முடியும். - engalthesam