மைத்ரி அணி சிரிகொத்தவில் ஆலோசனை! பிரச்சார நடவடிக்கைகளை அதிகரிக்கத் திட்டம்
http://newsweligama.blogspot.com/2014/12/blog-post_58.html
பொது வேட்பாளர் மைத்ரியின் பிரசார கூட்டங்களுக்கு மக்கள் படையெடுத்து வருவதானால் உற்சாகத்தில் உள்ள மைத்ரி அணியினரின் மந்திர ஆலோசனை கூட்டம் ஒன்று சற்றுமுன் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகம் சிறிகொத்தவில் தொடங்கியது.
பொது வேட்பாளர் மைத்ரி,ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில்,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா,ஜெனரால் பொன்சேகா, ராஜித சேனாரத்ன,மங்கள சமரவீர உள்ளிட்டோர் குறித்த முக்கிய கூட்டத்தில் கலந்துகொள்வதாக சிரிக்கொத்த செய்திகள் தெரிவித்தன.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நான்கு வாரங்களே எஞ்ஞியுள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்கள் மற்றும் காய்நகர்த்தல்கள் தொடர்பாக ஆலோசனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மைத்ரி அணியில் இருந்து கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் படி இன்னும் ஓரிரு திங்களுக்குள் ஆளும் தரப்பை சேர்ந்த 4 பேர் மைத்ரி அணியில் இணைந்துகொள்வார்கள் என தெரிகிறது.
இன்றைய மந்திர ஆலோசனையின் பின்னர் மைத்ரி அணியினர் அடுத்த கியரை மாற்றி வேகத்தை அதிரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிரது.