திருப்பதி சென்று வந்த மஹிந்த, இரண்டு பிரதியமைச்சர்களை இழந்து விட்டார்: ஹரின் பெர்ணான்டோ
http://newsweligama.blogspot.com/2014/12/blog-post.html
திருப்பதிக்கு சென்ற ஜனாதிபதி நாடு திரும்பிய போது இரண்டு இந்து பிரதியமைச்சர்களை இழக்க நேரிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கத்தில் சேர்ந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருப்பதி சென்று நாடு திரும்பியிருந்தார்.
ஊவா மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் ஹரின் பெர்ணான்டோ இந்த கருத்தை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது வெளியிட்டார்.
பிரதியமைச்சர்கள்- திகாம்பரம் மற்றும் ராதாகிருஸ்ணன் ஆகியோர் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வெளியிட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே ஹரின் கருத்து வெளியிட்டார்.
இரண்டு பிரதியமைச்சர்கள் எதிரணியில் சேர்ந்த நிலையில் 34 பிரதேசசபை உறுப்பினர்கள், நான்கு மாகாணசபை உறுப்பினர்களை அரசாங்கம் இழந்துள்ளதாகவும் ஹரின் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஊவா மாகாணசபையில் விரைவில் மாற்றம் ஒன்று நிகழும் என்றும் ஹரின் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ச முடிந்தால் செய்துக்காட்டுமாறு சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை தாம் ஏற்றுள்ளதாக ஹரின் தெரிவித்தார்.
தாம் நேற்று கண்டியில் இடம்பெற்ற பொதுவேட்பாளர் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாக குறிப்பிட்ட பெர்ணான்டோ, தாம் கோத்தபாய ராஜபக்சவுடன் சந்திப்பை நடத்தியதாக கூறப்பட்ட செய்தியை மறுத்தார்.