போர்க் குற்ற விசாரணையாளர்களுக்கு வீசா வழங்கப்போவதில்லை- ஜனாதிபதி
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_318.html
போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களுக்கு இலங்கை வர வீசா வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்தியாளர்களை இன்று தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அரசாங்கத்தின் அமைச்சர்கள் இந்த கருத்தை வெளியிட்டு வந்தபோதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முதல் தடவையாக ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களுக்கு வீசா வழங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
எனினும் தமது அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை, அதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.