நோய் குணமாக கசக்கும் மருந்தை அருந்தியே ஆக வேண்டும்..!!

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)

பலஸ்தீன-இஸ்ரேலிய யுத்தத்தின் மூலம் இன்று பலஸ்தீனத்தை சேர்ந்த பல்லாயிரம் முஸ்லிம்களின் உயிர்கள் பறிக்கப்பட்டும்,இன்று எத்தனை உயிர்கள் போகுமோ?நாளை எத்தனை உயிர்கள் போகுமோ?என்ற அச்சத்திற்கு மத்தியிலேயே பலஸ்தீன மக்கள் நாளுக்கு நாள் தங்கள் வாழ்க்கையை கடத்தி வருகிறார்கள் என்பது உலகமறிந்த உண்மை.

பலஸ்தீன எம் சகோதர முஸ்லிம்களின் உயிர்கள் பறிக்கப்படுவதை அறியும் ஒவ்வொரு முஸ்லிமும் சோக வெள்ளத்தில் மூழ்கி,எங்கே?எமக்கு பலஸ்தீனம் சென்று ஜிஹாத் செய்ய வாய்ப்பு கிடைக்க மாட்டாதா?என ஏங்கும் வண்ணம் பலஸ்தீன சோகம் உலக முஸ்லிம்களை ஆட் கொண்டிருக்கிறது.

எனினும்,ஒரு சில முஸ்லிம்கள் தற்போது இஸ்ரேல் சமாதானத்திற்கு உடன்பட்டால் ஹமாஸ் இயக்கமும் உடன்பட்டு எம் சகோதர முஸ்லிம்களின் உயிர்கள் பறிக்கப்படுவதைத் தடுக்கலாமே!என கூற ஆரம்பித்திருப்பதை அறிய முடிகிறது.

சமாதானத்தை புறக்கணித்து தங்கள் இயக்க அங்கத்தவர்கள் உயிர்களையும்,பொது மக்கள் உயிர்களையும் பறி கொடுப்பதால் ஹமாஸ் இயக்கம் எதுவித இலாபத்தையும் அடையப்போவதில்லை என்பதை இவ்வாறு கூறும் ஒவ்வொரு முஸ்லிமும் முதலில் தங்கள் மனதினில் நிலை நிறுத்துக் கொள்ள வேண்டும் .

எகிப்து செய்யும் எந்த முயற்சியும் தங்களுக்கு சார்பாக அமையாது என்பதை எகிப்தின் சில செயற்பாடுகள் உணர்த்தியமையினாலே எகிப்து மஸ்தியஸ்தம் வகிக்கும் சமாதான உடன்படிக்கைக்கு தாங்கள் உடன்படப்போவதில்லை என ஹமாஸ் இயக்கம் கூறி இருந்தது.

அண்மையில் காயப்பட்டோருக்கு மருத்துவ உதவிகளை செய்கிறோம் என்ற பெயர்களில் அலி ஸீஸீ தலைமையிலான எகிப்து அரசாங்கம் காட்டிக் கொடுக்கும் பல செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

இப்படியான அரசாங்கத்தை எங்ஙனம் நம்புவது?

துருக்கி,கட்டார் போன்ற நாடுகளின் சமாதான உடன்படிக்கைக்கு இஸ்ரேலிய அரசாங்கத்தால் உடன்பட முடியா திருப்பதே எகிப்திய அரசாங்கத்தின் சமாதான உடன்படிக்கையின் வலுவை தெளிவாக சுட்டி நிற்கிறது.

சமாதான உடன்படிக்கை என்பது ஆராய்ந்து பார்க்காது,மிகத் தெளிவான ஒப்பந்தங்கள் இல்லாமல் செய்ய முடியாது.

ஏனெனில்,தற்போது இஸ்ரேலிய அரசானது பலஸ்தீனத்தின் மீதான தாக்குதலின் அரசியல் ரீதியான காய் நகர்த்தல் 2012 ம் ஆண்டு பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்திய போது முர்ஸி தலைமையிலான எகிப்து அரசாங்கம் செய்த பலஸ்தீனத்திற்கு சார்பான உடன்படிக்கையை முறித்து இன்னுமொரு உடன்படிக்கை செய்து கொள்ளவே என பல அரசியல் அவதானிகள் சுட்டி வருகின்றனர்.

இச் சுட்டிக்காட்டலே சமாதான ஒப்பந்தம் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நிற்கிறது.

பொதுவாக இஸ்ரேல் பலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்த ஏதாவது ஒரு நொண்டிக்காரணத்தையாவது முன்வைக்கும்,முன்வைக்கவும் வேண்டும்.காரணமின்றி இஸ்ரேல் தாக்குதல் நடாத்த முயற்சிப்பின் அது இஸ்ரேலிற்கு உலக அரங்கில் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம்.பலஸ்தீனத்திற்கு எதிரான சமாதான உடன்படிக்கையை செய்து ஏதாவது ஒரு விடயத்தில் பலஸ்தீனம் மீறுமாக இருந்தால் அதுவே இஸ்ரேலிற்கு பலஸ்தீனம் சென்று பலஸ்தீன் முஸ்லிம்களின் இரத்தம் குடிக்க காரணமாகிவிடும்.

அநியாயமாக இஸ்ரேல் தாக்குதல் நடாத்தும் போதே உலக நாடுகள் மௌனம் காக்கின்றன.பலஸ்தீனம் உடன்படிக்கையை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடாத்தினால்..?

ஹமாஸ் சமாதான உடன்படிக்கையை புறக்கணிக்க இவைகள் மட்டும் காரணம் அல்ல.தற்போது இஸ்ரேல் அரசானது என்றுமில்லாதது போன்று யுத்த வீழ்ச்சியைக் கண்டு வருகிறது என்பதை அரசியல் அவதானிகள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீழ்ச்சியை இன்னும் இன்னும் அதிகரிக்காமல் தடுக்கவே இஸ்ரேல் சமாதானத்தான ஒப்பந்தத்திற்கு உடன்படுகிறது என்பது வெளிப்படை உண்மை.ஹமாஸ் இயக்கமானது உடன்படிக்கைக்கு மறுப்பு தெரிவிப்பதானது ஹமாஸ் இயக்கமானது பாரியளவு பலத்துடன் இருப்பதை புலப்படுத்தும்.இவர்கள் தாக்குதலுக்கு இன்னும் எத்தனை வழிகளில் தயாராகி நிற்கிறார்களோ? என்ற வினா எழுந்து இஸ்ரேல் நாட்டையும்,படையினரையும் உளவியல் ரீதியாக பாரிய பின்னடைவை சந்திக்க வழி கோலும்.

எதிர்காலத்திலே இஸ்ரேல் பலஸ்தீனத்தின் மீது அவ்வளவு சீக்கிரத்தில் தாக்குதல் நடாத்த வராது.நாம் தோல்வியை சந்தித்தால் அவர்கள் அவ்வளவு இலகுவில் சமாதானத்திற்கு வர மாட்டார்கள் என மிக அதீதமாக சிந்திக்க ஹமாஸின் இச் செயற்பாடுகள் வித்திடும்.

இஸ்ரேலிய பொறியில் ஹமாஸ் இயக்கம் வீழ்ந்திடாது பலஸ்தீனப் பொறியில் இஸ்ரேலை வீழ்த்தவே ஹமாஸ் இயக்கத்தின் தற்போதைய போக்கு அமைந்துள்ளது.

நோய் குணமாக கசக்கும் மருந்தை குடிப்பதைப் போன்று எதிர்காலத்தில் பல்லாயிரம் முஸ்லிம்களை பலி கொடுக்காமல் தடுக்க தற்போது எம் சகோதர முஸ்லிம்களின் உயிர்கள் செல்கின்றன என்றே நாம் எமது மனதே தேற்றிக் கொள்ளவே வேண்டுமே தவிர ஹமாஸ் இயக்கத்தை சமாதான உடன்படிக்கைக்கு உடன்படிகாமல் இருக்கிறதே என நொந்து கொள்ளவது உசிதமானது அல்ல.

Related

Articles 8098630813711591749

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item