மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதின (படங்கள்)
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_906.html
பதுளை - நுவரெலியா பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. நேற்றிரவு 11 மணியளவில் இடம் பெற்ற இவ்விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து நுவரெலியா ஆரம்ப வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் ஜீப் வண்டி ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
முச்சக்கர வண்டியின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதியவுடன் பின்னால் வந்த ஜீப் வண்டியும் அவற்றுடன் மோதியுள்ளது. விபத்து நேர்ந்தவுடன் முச்சக்கர வண்டியும் ஜீப் வண்டியும் பாதையை விட்டு விலகிச்சென்றுள்ளன. மோட்டார் சைக்கிளில் வந்தவரே படுகாயம் அடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பட உதவி: Neth FM