இந்த நாட்டுக்கு பல சேனாக்கள் அவசியம் இல்லை
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_917.html
இந்த நாட்டில் இராணுவத்தினரும் பொலிஸாரும் தவிர, வேறு யாருக்கும் பலசேனா அமைக்க முடியாது. மீகெட்டுவத்த தேரர் மக்களுக்கு அடிக்கச் செல்லவில்லை. மகாநாயக்க தேரர்களும் இந்த பலசேனாக்கள் வேண்டாம் என்றே கூறுகின்றனர் என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்களை அமைச்சர்கள் குழுவொன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் மேர்வின் சில்வா, ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
காலான் முளைப்பது போன்று இந்த நாட்டில் சேனாக்கள் உருவாக முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் ஐக்கியமிக்க ஒரு சமூகத்தையே உருவாக்க செயற்படுகின்றார். இது தொடர்பில் நாம் மகாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தினோம். அவர்களும் இந்தக் கருத்தில் உடன்பட்டனர். அந்த அமைப்பு இந்த அமைப்பு எல்லாம் எமக்குத் தேவையில்லை. எமது மகாநாயக்கர்களினால் உருவாக்கப்பட்ட நிகாயாக்கள் இருக்கையில் இந்த சேனாக்கள் எமக்கு அவசியமில்லை. இந்த சேனாவினால் புத்தசாசனத்துக்கே அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது. - DailyCeylon