நரேந்திர மோடி, சுஷ்மாவுடன் கூட்டமைப்பு சந்திப்பு

இந்தியாவுக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள ஆறு உறுப்பினர்கள் அடங்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் வைத்து நாளை மறுதினம் சனிக்கிழமை சந்திக்கவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலைநாதன், பொன். செல்வராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த குழுவினர் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரையும் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் டெல்லிக்கு செல்கின்ற இந்தக்குழு, சுஷ்மா சுவராஜை வெள்ளிக்கிழமையும் மோடியை எதிர்வரும் சனிக்கிழமையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இந்த விஜயம் மற்றும் சந்திப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படும் அல்லது அதற்கு அப்பால் சென்று தீர்வுகாணப்படும் என்று இலங்கை அரசாங்கம் உத்தரவாதமளித்துள்ளது.அதனையே நாமும் வலியுறுத்துவோம். 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு நாம் கோருவோம் என்றார்.

இதேவேளை, வெளிநாட்டு ஊடகங்களைச்சேர்ந்த ஊடகவியலாளர்களை அலரிமாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மத்திய அரசாங்கத்திடமே பொலிஸ் அதிகாரம் இருக்கும், அந்த அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்படமாட்டாது என்று அறிவித்திருந்தார்.13ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related

சர்வதேசம் 7101455664220890261

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item