ஐஸ் குளியலை நிராகரித்தார் அமைச்சர் மேர்வின்.

மேல் மாகாண சபை உறுப்பினர் மல்ஸா குமாரதுங்கவின் ஐஸ் வாளி சவாலை அமைச்சர் மேர்வின் சில்வா நிராகரித்துள்ளார். மறுப்புக்கான  காரணங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை, கலாசாரத்தை பாதிக்காத வகையில் நல்ல விடயங்களுக்கு நிதிசேகரிப்புகள் இடம்பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மல்ஸா தம்மை ஐஸ்வாளி சவாலுக்கு அழைத்தபோதும் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் குடிநீருக்கு தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளமையை கருத்திற்கொண்டு தாம் அதனை நிராகரிப்பதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக மல்ஸா, அமைச்சர் மேர்வின் சில்வா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோரை ஐஸ்வாளி சவாலுக்கு அழைத்திருந்தார்.

இதில் ஹிருணிக்கா மல்ஸாவின் சவாலை ஏற்றுக்கொண்டார்

Related

உள் நாடு 5111115494384155887

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item