தம்புள்ள பள்ளிவாசலில் தொழுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அனுமதி மறுப்பு.

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_328.html
சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிகள் நாளை தம்புள்ளையில் அமைந்துள்ள ரங்கிரி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
இப்போட்டிகளில் பங்கேற்கும் நோக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் நேற்று தம்புள்ளைக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், 29-08-2014 மாலை தொழுகைகளை மேற்கொள்ள தம்புள்ளையில் அமைந்துள்ள மஸ்ஜிதுள் ஹய்ரா பள்ளிவாசலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களும் ஏனைய அதிகாரிகளும் முயற்சித்துள்ளனர்.
எனினும் பாதுகாப்பு தரப்பினரால் அங்கு செல்ல இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையினால், பாகிஸ்தான் அணி வீரர்களும் அதிகாரிகளும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இலங்கை அதிகாரிகள் அவமரியாதை செய்துள்ளதாக சில பாகிஸ்தான் வீரர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கலேவல பள்ளிவாசலுக்கு சென்று, தமது வெள்ளிக்கிழமை மாலை தொழுகைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தம்புள்ளை பள்ளிவாசலை இடிப்பதற்காக பல பௌத்த குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பள்ளிவாசல் புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாகவும் அதனை உடைக்குமாறும் தற்போதும் சில பௌத்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.