தயாசிறி ஜயசேகர மீண்டும் ஐ.தே.கட்சியில் இணைவார்: ரஞ்சன் ராமாநாயக்க

https://newsweligama.blogspot.com/2014/09/blog-post_71.html
தயாசிறி ஜயசேகர, ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்படும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தவிர கட்சியில் உள்ள அனைவரையும் கடுமையாக சாடியுள்ளார்.
எதிர்கால தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்படும் சஜித்தை தவிர, ரணில், ஹரின், நான் உட்பட அனைவரையும் தயாசிறி கடுமையாக சாடினர்.
ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் போது ஜயசேகர மீண்டும் கட்சியில் இணைவார்.
எனினும் அவரை மீண்டும் ஏற்பத்தில் கட்சிக்குள் தயக்கங்கள் உள்ளன. தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மற்றும் உறுப்பினர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
அவர் கட்சியில் இணைந்தாலும் அவருக்கு உயர் பதவிகள் வழங்கப்படக் கூடாது எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.