பொதுபலசேனா மன்னிப்பு கேட்டாலும் முஸ்லிம் கவுன்சில் பிரச்சினைகளை தூண்டுமா?
http://newsweligama.blogspot.com/2014/05/blog-post_6936.html
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜாமத்தின் செயலாளர் சகோதரர் அப்துல் ராசிக் பௌத்த மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூலில் இருந்து கூறிய ஒரு தகவலில் புத்தர் மனித இறைச்சி உண்டதாக கூறப்பட்டதாக தவறுதலாக கூறி இருந்தமை நாம் யாவரும் அறிந்ததே.
இது தேரர் ஒருவர் மனித இறைச்சி உண்டதாகவே அந்த நூலில் கூறப்பட்டமை புத்தர் என்று இவர் தவறுதலாக கூறியதாகவும் அதற்காக தான் மன்னிப்பு கோருதாகவும் அறிவித்துவிட்டார். இதற்கான சட்ட நடவடிக்கைக்கும் அவர் உள்வாங்கப்பட்டார். மாற்று மதங்களை பற்றிய உரையாடல்களை கையில் எடுத்து மத நல்லிணக்கங்களை, மதங்களில் உள்ள உண்மைகளை எடுத்து சொல்லும் முயற்சியில் ஈடுபடும் எல்லா மனிதர்களிலும் தகவல்களில் சில தவறுகள் ஏற்படுவது மனித இயல்பே.
புத்தர் மனித இறைச்சி உண்டார் என்பதும் அவரோடு இருந்த தேரர் உண்டார் என்பதும் பாரிய வித்தியாசமான தகவல் அல்ல. ஆனாலும் தவறு என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் மதிக்கும் நூலில் மனித இறைச்சி உண்ட பௌத்த துறவிகளும் உள்ளனர் என்ற தகவலே கருத்தாக்கத்தின் சாரம் என்பதே தவிர யார் உண்டார் என்ற தகவலில் உள்ள தவறை வைத்து பிரச்சினையை விரும்புகின்றவர்களே இதனை பெரிதாக்க விரும்புகின்றனர் என்பதே உண்மை.
இறைச்சி உண்ணுவதை தடுக்க முற்படும் இவர்களின் நூல்களில் உள்ள அசைவ உணவு பற்றிய உண்மையை இது அவர்களுக்கே எடுத்து சொல்ல காரணமாக அமைந்ததே தவிர இது வேண்டும் என்று எழுப்பப்பட்ட தகவல் அல்ல. மனித இறைச்சி உண்ணும் அளவு பௌத்த துறவிகள் இருந்துள்ளார்கள் என்றால் மாட்டு இறைச்சியை உண்ணுவதில் என்ன குற்றம் என்ற கேள்வியை நமக்கு சாதகமாகவே பௌத்த மக்களில் அது ஏற்படுத்தி நிற்கும் என்பதே நிதர்சன உண்மை.
இப்படியான தவறுகளை சுட்டுகாட்டியும் திருந்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம் கண்டனம் தெரிவிக்கலாம் என்பது பொதுவான மரபு ஆகும். ஆனால் தான் கூறிய தகவலில் ஏற்பட்ட பிழைக்கு தான் மன்னிப்பு கேட்கிறேன் என்று உறுதியாக அவர் பல இடங்களில் அறிவித்த பின்பும் அதனை வெளிப்படையாக எந்த ஊடகத்தில் கூறினாரோ அதே ஊடகங்களில் ஊடக மாநாடு நடத்தி தனது மன்னிப்பை தெரிவித்த பின்பும் முஸ்லிம் கவுன்சில் போன்ற அமைப்புகள் யாரின் நலவை நாடி இதனை தூக்கி பிடித்து பூதாகாரமாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.
இப்படியான நடவடிக்கை கையில் எடுக்கின்றவர்கள் இனவாதிகள் அல்குர்ஆனை தூற்றும்போது இஸ்லாத்தை கொச்சைப்படுதும்போது இந்தளவு கோபம் கொள்ளவில்லை என்பது வேதனையான விடையமாகும். மன்னிப்பு கேட்டு தனது தவறை வெளிப்படையாக அறிவித்த ஒருவரை மீண்டும் மீண்டும் சட்ட நடவடிக்கை எடுக்க கோருவது என்பது இவர்கள் பொதுபலசேனா அமைப்பு, ஞானசார தேரர் போன்றவர்கள் இஸ்லாத்தையும் குர்ஆனையும் கொச்சைப்படுத்தியதட்கு மன்னிப்பு கேட்டாலும் அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க முஸ்லிம் கவுன்சில் கோருமா?
இந்த அணுகுமுறை நாட்டின் சட்டத்துக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் உகந்ததா என்பதை முஸ்லிம் கௌன்சில் அமைப்பு தம்மை கவுன்சில் சுய விசாரனை செய்ய வேண்டிய தேவை உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும். ஏற்கனவே இனவாதம் நம்மை இலக்குவைத்து காத்திருக்கும் நேரம் நாமே எரியும் தீயில் என்னை ஊற்றி நமது சகோதரர்களை காட்டிக்கொடுக்கும் வேலைகளை செய்வது வேதனைக்குரிய விடையமாகும். மாற்று மத உரையாடல்களில் மனித தவறுக்கு அப்பால்பட்டு கறுத்த பதியமுடியாது என்பதை வரலாற்று பக்கங்களை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் புரியும்.
ஆனாலும் சுட்டிக்காகட்டும் தவறுகளை மனமுவந்து ஏற்று மனிப்பு கேட்கின்றவர்களே உண்மையான கருத்து பரிமாற்றங்களுக்கும் மத நல்லிணக்கம் ஏற்படுத்தவும் தகுதியானவர்கள் என்பதோடு தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கின்றவர்களை பலிவாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானவர் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) - கெய்ரோ, எகிப்து