இலங்கைக் கிரிக்கட் பெண்கள் அணியில் சேர வேண்டுமாயின் பாலியல் லஞ்சம் கேட்கப்படுகின்றது?
http://newsweligama.blogspot.com/2014/10/blog-post_44.html
இலங்கை கிரிக்கெட் மகளிர் அணிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக குற்றம்சாட்டப் பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
ஆனால் இது தொடர்பில் உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் இதுவரை பதிவாகவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி டி சில்வா தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக செய்தி தகவல்களை சேகரித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் ஏஸ்லி டி சில்வா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் மொஹான் டி சில்வா, செயலாளர் நிஷாந்த ரணதுங்க, உதவி செயலாளர் ஹிரந்த பெரேரா, தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய ஆகியோர் விசாரணைக் குழுவில் உள்ளதாக அவர் கூறினார்.