கல்விக் கல்லூரிக்கான புதிய மாணவர்கள் பதிவு இம்மாதம் 23 இல் – பீடாதிபதி
http://newsweligama.blogspot.com/2014/08/23.html
கற்பித்தல் தேசிய டிப்ளோமா – 2014 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான பதிவுகள் இம்மாதம் 23, 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் அறிவித்துள்ளார்.
கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், ஆரம்பபிரிவு, விஷேட கல்வி மற்றும் இஸ்லாம் ஆகிய பாடநெறிகளுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் நேரத்துக்கு தவறாது சமூகம் தருமாறும் பீடாதிபதி கேட்டுள்ளார்.
இவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் 2014.09.02 ம் திகதியில் இருந்து ஆரம்பமாகும் எனவும் கல்லூரியின் பீடாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.