Sri Lanka crush Black Caps to level series
http://newsweligama.blogspot.com/2015/01/Sri-Lanka-crush-Black-Caps-to-level-series.html
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது.
ஹெமில்டனில் நடைபெற்ற போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது.
நியூசிலாந்து சார்பில் பிரன்டன் மெக்கலம் 117 ஓட்டங்களையும் ரொஸ் டெயிலர் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை சார்பில் சேனாநாயக்க, ஹேரத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு 249 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தில்ஷானின் சதத்தின் உதவியுடன் 47.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
திலகரட்ன தில்ஷான் 116 ஓட்டங்களையும் சங்கக்கார 38, மெத்திவ்ஸ் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதன்படி 7 போட்டிகள் கொண்ட தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலை அடைந்துள்ளது. ஆட்ட நாயகனாக தில்ஷான் தெரிவு செய்யப்பட்டார். - Ada Derana