பொது பல சேனா ஜம்மியத்துல் உலமாவை தனது வலைக்குள் வீழ்த்த விவாத வலை வீசுகிறதா..??
http://newsweligama.blogspot.com/2014/10/blog-post_30.html
பொது பல சேனா அமைப்பானது குர்ஆன் மீது எப்போது? அப்பட்டமான புளுகு மூட்டைகளை கட்டவிழ்த்து விட ஆரம்பித்ததோ அன்று தொடக்கம் தாங்கள் முஸ்லிம்களுடன் விவாதத்திற்கு தயார் என மேடைகளில் வீர வசனம் பேசித் திரிந்தாலும்,முஸ்லிம்களிடம் நேரடி விவாதம் செய்யாது ஓடி ஒளியும் போக்கையே இதுவரை காலப் பகுதியிலும் கடைப்பிடித்து வந்தது .எனினும்,அண்மையில் acju இன் கீழ் விவாதம் செய்ய தயார் என்ற திடீர் அதிரடி முடிவை பொது பல சேனா அமைப்பு வெளியிட்டுள்ளது.
பொது பல சேனா அமைப்பின் இவ் அழைப்பிற்கு ஏதும் உள் நோக்கம் இருக்குமா?என்றே சிந்திக்க தோன்றுகிறது. பொது பல சேனா acju இனது காதிற்கு அருகில் சென்று கூக்குரல் இடுகின்ற போதும் துஸ்டனைக் தூர வழி என acju தனது பயணப் பாதையை அமைத்து வருகிறது.ஹலால் விடயத்தில் விட்டுக் கொடுப்பை பகிரங்கமாகவே செய்தது.பொது பல தங்களைப்பற்றி எது கூறினாலும் அதனை கிஞ்சித்தும் கணக்கு எடுப்பதில்லை.
sltj யைப் பொறுத்த மட்டில் அவ்வாரு இல்லை என்றே பொது பல சேனா ஒன்று என்றால் sltj இரண்டு எனுமளவு ஏட்டிக்கு போட்டியாக தனது செயற்பாட்டை அமைத்து வருகிறது.உண்மையில் sltj இனை பொது பல சேனா தனது வலைக்குள் வீழ்த்தி வெற்றி கண்டு விட்டது என்று தான் கூற வேண்டும்.பொது பல சேனா sltj இனை வம்பிற்கு இழுத்தது இழுத்த இழுவைக்கு sltj யும் சென்றது.அதனுடைய செயலாளர் ராசிக் பெளத்த மதத்தில் இல்லாத (புத்தர் மாமிசம் சாப்பிட்டதாக) ஒரு விடயத்தைக் கூறி இருந்தார். அதனை பொது பல சேனா ஊதிப் பெருப்பித்து sltj யை பெரும் பான்மை இன மக்களிடம் தங்கள் எதிரியாக சித்தரித்தது.
பொது பல சேனா வின் செயற்பாடு பௌத்த செயற்பாடு அல்ல எனக் கூறும் ஒவ்வொரு உண்மைப் பௌத்தனும் பொது பல சேனா வை தடை செய்ய சிந்தனை கொள்ளும் அதே கனம் sltj யும் தடை செய்யப்பட வேண்டும் எனக் கூறுமளவு பொது பல சேனா sltj இனை பேரின மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது என்றே கூற வேண்டும்.
தாம் இழுத்த எந்த இழுப்பிட்கும் acju ஆடாததால் acju பேரின மக்களிடம் தனது இன எதிரியாக காட்ட முனைந்த பல முயற்சிகளில் பொது பல சேனா தோல்வியையே தழுவியது. .இவ் அழைப்பினது ஒரு நோக்கம் acju வை தனது வலைக்குள் அகப்படச் செய்ய இருக்கலாம்.எனவே,விவாத விடயத்தில் acju இனது போக்கு மிகவும் அவதானமாகவும் நிதானமானதாகவும் அமைதல் வேண்டும்..
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை