முஸ்லிம் சமூகத்தின் செல்லாக் காசுகள்

-மொஹமட் ஹனீஸ்-

நீண்டதாக, விளக்கமாக சொல்லுவதற்கு எண்ணங்கள் சமநிலையாக இல்லை,  உங்கள் வாசிப்புகளுக்கு ரசனை ஊட்டுவதற்கு முழு சூய நினைவிலும் இல்லை எந்த முஸ்லிம் இளைஞனும்.

மறைந்த தலைவர் எம் . எச் . எம் .  அஷ்ரப் அவர்கள் முஸ்லிம்களுக்கான ஒரு தனியான கட்சியை ஊருவாக்கு வதர்க்கான முக்கிய குறிக்கோள்களில் ஓன்று,  இலட்சக்கணக்கான தமிழ் சகோதரர்கள் மடிந்து போனதை போல் அல்லாமல் முஸ்லிம் சமூகத்தையும்,  முஸ்லிம் இளைஞர்களையும் சாத்வீக முறையில் அரசியல் மயப்படுத்தி தமது உரிமைகளையும்,  சலுகைகளையும் அடைய வேண்டும் .  அதில் அவர் மறையும் வரை வெற்றியும் கண்டார். 

அவர் தலைமைத்துவ பாசறையில் வளர்ந்தவர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் நம்எண்ணிக்கை இல்லா தலைவர்கள் எங்கள் சமூகத்தை பாதுகாக்க தவறிவிட்டார்கள், முயற்சிக்கவும் இல்லை. 

இவர்களை மக்கள் தெரிவு செய்தது வெறுமனே தார் வீதிகளுக்கும்,  சீமெந்து கட்ட்டிடங்களுக்கும் மாத்திரம் என்று நினைத்து விட்டார்கள்.

சுமார் இரண்டு வருடமாக புகைந்து கொண்டு இருந்த இந்த பிரச்சினைகள் ஒரு நாள் கொழுந்து விட்டு எரியும் என்று நமக்கு எல்லோருக்கும் தெரியும்,  ஆனால் நமது ராசாதலைவர்க்களுக்கு புரியவில்லை
 என்னை பொறுத்தவரையில் நாம் பறிகொடுத்தஉயிர்களுக்கும்,  அளிக்கப்பட்ட சொத்துகளுக்கும் போருப்புதாரிகளும்,  பதில் கூறவெண்டியவர்கல் நம்நாட்டு அரசாங்கமோ அல்லது பொதுபலசெனவோ அல்ல நமது இந்த தலைவர்கள்தான் இப்போது மாத்திரம் அல்ல மறுமையிலும் கூட. 

மின்னல் ரங்கா சொல்லுவது போல் இடிப்பது பள்ளியாக இருந்தாலும் இருப்பது அமைச்சர் கதிரையாக இருக்க வேண்டும் என்பதா, 
எங்களுக்கு என்று தனியான மாகாணசபை,  நாங்கள் நினைத்தை சாதிப்போம் என்று மார்தட்டி கொண்டு இருக்கும் நமக்கு ஒரு கண்டின எதிர்ப்பு பிரரனை ஒன்றை கூடநிறை வேற்ற முடியாமல் இருக்கின்றது,  இது ஒரு மானக்கேடான சம்பகமாகும்.  மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களின் பிரரனையை ஒரு அரசாங்க செயலாளர் தடுப்பதாகும். 

எரிந்து முடிந்த சாம்பல்களின் மேல் இவர்களின் காலடி தடங்களைபடுத்தியும்,  இத்தாஹ் வீட்டு துக்க விசாரணையுடன்  ( இவர்கள் என்ன மரண விசாரணை அதிகாரிகளா) இவர்களின் சமூதய கடப்பாடு முடிந்தது விடுகின்றன, 
“இன்னும் சில தலைவர்கள் குதிரை சவாரி போனவர்கள் வீடு திரும்பவில்லையாம்” 
முழு,  அரை,  கால் அமைச்சர்களே,  சாம்பலான உடமைகளுக்கு நஷ்டஈடு தருவதற்கு நீங்கள் தேவை இல்லை,  அதை காப்புறுதி நிறுவனம் தந்து உதவும், 
இடிந்த பள்ளி வாசல்களையும்,  வீடுகளையும் மீளமைப்பதர்க்கு நீங்கள் தேவை இல்லை,  எத்தனையோ சமூக நலன் வெளி நாட்டு உள்நாட்டு தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. 

உங்கள் கடைமைப்பாடு என்னவென்பது என்று உங்களுக்கும் தெரியவில்லை,  உங்களை என்ன செய்வது என்று எங்களுக்கு புரியவில்லை. 
புழக்கத்தில் இல்லாத நாணயங்களாக போய் கொண்டு இருக்கிறிர்கள்,  அப்படியோ ஒருநாள் மறைந்தது போய் விடுவீர்கள். 

நிலைமை மிக மோசமாக போய் கொண்டு இருகின்றன,  நமது இளைஞர்கள் கண்ணீரோடு சேர்த்து கோபத்தையும் நெருப்பாக காக்கி கொண்டு இருக்கிறார்கள்.  ஒரு சிலரின் தவறுகளால் வந்த கோபம் ஒரு இனத்தின் மீது வெறுப்பாக மாறுவதற்கு முன் தடுத்து நீருத்துங்கள், 

இல்லாவிடின் இதன் முடிவுகளும் விளைவுகளும் மிகவும் விவரிதமாகவும் எதிபார்க்காதாகவும் இருக்கும்.

ஆல்லஹ்தான் என்எல்லோரையும் பாதுகாக்க வேண்டும். ஆமீன்.

Related

Articles 4544466058828214402

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item