22 வயதான யுவதியை கத்தியால் குத்திய காதலன்
http://newsweligama.blogspot.com/2014/08/22.html
கொழும்பு நூதனசாலைக்கு அருகிலுள்ள வீதியில் யுவதி ஒருவரை அவரின் காதலர் எனக் கூறப்படும் ஆணொருவர் நேற்று கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
22 வயதான தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் யுவதியே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். 23 வயதான தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவரே இவ்வாறு கத்தியால் குத்தியுள்ளார் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காதல் விவகாரம் தொடர்பிலான பிரச்சினை காரணமாகவே இந்தக்கத்திக்குத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமுற்ற பெண் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.