ஊவாவில் வன்முறை ; கடையும் ஆட்டோவும் தீக்கிரை!
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_866.html
ஊவா மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஊவபரணகம,கலஹகமவில் அமைக்கப்பட்டிருந்த ஐ.தே.க.காரியாலயம் மீது நேற்றிரவு 3.00 மணியளவில் இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மட்டுமன்றி,இக்காரியாலயத்துக்கு அண்மித்த கடையையும்,காரியாலய வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த முச்சக்கர வண்டியையும் குறித்த நபர்கள் தீவைத்து எரித்துள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் ஏ.எம்.புத்ததாசவின் ஆதரவாளர்களே இச்செயலில் ஈடுபட்டிருப்பதாக,பதுளை மாவட்ட ஐ.தே.க. வேட்பாளர் ஜயந்த கண்ணங்கர தெரிவித்துள்ளார்.
இதுவரையில்,பதுளையில் இருந்து நான்கும்,மொனராகலையில் இருந்து இரண்டுமாக ஊவாவில் 06 வன்முறைச் சம்பவங்கள் பதியப்பட்டிருக்கின்றன.