பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான பிரேரணை நிராகரிப்பு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_941.html
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலகுமாறு வலியுறுத்தி சமரப்பிக்கப்பட்ட பிரேரணையை அந்நாட்டு பாரராளுமன்றம் ஏகமனதாக நிராகரித்துள்ளது.
பிரதமர் பதவி விலகவேண்டும் எனவும் , மக்களவையை கலைக்குமாறும் நாட்டின் எதிர்கட்சி தலைவர்களால் விடுக்கப்பட்டகோரிக்கையை பாராளுமன்றம் நிராகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் பிரதமர் பதவி விலகும் வரை தமது போராட்டங்கள் தொடரும் என எதிர்கட்சித் தலைவர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கும் அரச எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள 2 குழுக்களுக்கும் இடையிலான ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தைகள் இரண்டாவது நாளாகவும் இன்று நடைபெறவுள்ளன.
பிரதமர் நவாஸ் செரீப் பதவி விலக வேண்டும் என ஆர்பாட்ட குழுக்களின் தலைவர்களான இம்ரான்கான் மற்றும் மத குருவான தாஹீர் உல் கட்ரி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடம்பெற்ற பரந்த அளவில் வாக்குமோசடிகளை அடுத்தே நவாஸ் செரீப் ஆட்சிக்கு வந்ததாக ஆர்பாட்டகாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனினும் நவாஸ் செரீப் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.