டுபாயில் திறக்கப்படவுள்ள இலங்கையருக்குச் சொந்தமான 5 நட்சத்திர ஹோட்டல்
http://newsweligama.blogspot.com/2014/08/5_20.html
இலங்கையரொருவருக்குச் சொந்தமான 5 நட்சத்திர ஹோட்டலொன்று டுபாய் நாட்டில் அடுத்த மாதம் 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.
மெரியொட் அல் ஜடாப் என்ற குறித்த ஹோட்டலானது அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மெரியொட் ஹோட்டல் குழுமத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
இதனை நிர்மாணித்தவரும், இதற்கு சொந்தக்காரருமான நந்தன லொக்குவிதான இலங்கையில் நாத்தாண்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு டுபாய்க்குச் சென்ற நந்தன மேற்படில் ஹோட்டல் திட்டத்தில் 225 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்