வாத்துவையில் விபத்து: யானை உட்பட 7 பேர் காயம் - (படங்கள்)
http://newsweligama.blogspot.com/2014/08/7_17.html
காலி வீதியில் யானை ஒன்றை ஏற்றிச் சென்ற லொறீ ஒன்று சொகுசு பஸ் ஒன்றுடன் மோதியதில் யானை உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.
பஸ் வண்டியின் சாரதியும் லொறியின் சாரதியும் காயமடைந்தவர்களில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்டவர்கள் பாணந்துறை மற்றும் நாகொடை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாத்தறைப் பகுதியில் நடக்கும் பெரஹர ஒன்றுக்கு இந்த யானையை கொண்டு போகும் வழியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.