இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை ஆரம்பம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_19.html
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இவ் விசாரணைக் குழுவுக்கு தகவல் மற்றும் ஆதாரங்கள் வைத்திருப்பவர்கள் அக்டோபர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கடந்த 2002 பெப்ரவரி 21ஆம் திகதி முதல் 2011 நவம்பர் 15 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தகவல்களை வரும் அக்டோபர் 30ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு கிடைக்கும் தகவல்களை விசாரணைக்கு குழு தனது அறிக்கையை அளிப்பதற்கு முன்பு ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களை அளிப்பவர்கள், தங்களை தொடர்பு கொள்வதற்கான மின்னஞ்சல், தொலைபேசி உள்ளிட்ட தகவல்களை சேர்த்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. - அத தெரண
தகவல்களை ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் அனுப்பலாம் என்றும், 10 பக்கங்களுக்கு அதிகம் இல்லாது அனுப்ப வேண்டும் என்றும் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. - அத தெரண