இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு சர்வதேச மாநாடு இன்று கொழும்பில்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_191.html
இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள “இலங்கை எழுச்சி பெறும் தேசமொன்றுக்கான சவால்கள்” எனும் கருப்பொருளிலான 4வது சர்வதேச மாநாடு இன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
2014 ஆம் ஆண்டிற்கான இந்த பாதுகாப்பு கருத்தரங்கில் 66 நாடுகளைச் சேர்ந்த 197 வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட 350 பாதுகாப்பு மற்றும் துறைசார் பிரதிநிதிகள் கலந்துகொள்ள வுள்ளமை விசேட அம்சமா கும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இம்மாநாடு இன்று ஆரம்பமாகி மூன்று தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.