இஸ்லாமிய பயங்கரவாதம் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல் - கோட்டாபய
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_552.html
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் குறித்து கண்காணிக்கப்பட உள்ளதாகவும் அது நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் சில குழுக்கள் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் அவை குறித்து கண்காணிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் சில தற்பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான சில குழுக்கள் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கோட்டாபாய ராஜபக்ஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படாவிட்டால் மீளவும் இன முரண்பாடுகள் வெடிக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.- அத தெரண