யாழ். புகையிரதப் பாதை துரிதகதியில் புனரமைப்பு (படங்கள்)

யாழ். குடாநாட்டில் உள்ள பிரதான புகையிரத நிலையங்களின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் கொழும்பு - காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ரயில் நிலைய புனரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் நாவற்குழிப் புகையிரத நிலையம் புனரமைக்கப்பட்டு வருகிறது.

ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் செல்லும் பொழுது நாவற்குழி கடல்நீரேரியினை ஊடறுத்துச் செல்லும் பாலம் நவீன தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

எனினும் விரைவில் யாழ். கொழும்பு கோட்டை புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Related

உள் நாடு 9021530253764883061

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item