காலித் மிஷ்அல் விடுத்திருக்கும் அறிக்கை
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_224.html
1.இஸ்ரேல் இரு முக்கிய தவறுகளை செய்து விட்டது ஒன்று எகிப்து மத்தியஸ்தம் வகித்த பேச்சுவார்த்தையை ஒரு மூடிய பாதைக்கு கொண்டு வந்து விட்டது.
2.அடுத்தது , குறித்த நேரம் முடிவடைய முன்னர் பேச்சுவார்த்தையை இரத்து செய்யும் வகையில் காஸா மீது தாக்குதல் நடாத்தியது.
3.நாம் எகிப்தின் உள் விவகாரத்தில் தலையிட வில்லை. இதனால் தான் எகிப்தின் சமாதான வரைவை நாம் மறுத்த போதும் எகிப்தின் மத்தியஸ்தத்தை மறுக்க வில்லை.
4. நாம் எமது கோரிக்கைகளிலிருந்து வாபஸ் வாங்க மாட்டோம். அதில் தலையாயது காஸா மீதான முற்றுகையை நீக்குவது.
5.கட்டாருக்கும் , ஹமாசுக்குமிடயிலான தொடர்பு புதிதல்ல
6.இஸ்ரேல் வழக்கம் போல சர்வதேச சமூகத்திடம் பொய் சொல்ல ஆரம்பித்துள்ளது. போர் நிறுத்தத்தை பாதியில் இரத்து செய்து பலஸ்தீன் போராட்ட தலைமைகளை படுகொலை செய்யத் திட்ட மிட்டது. என்றாலும் தோல்வி அடைந்து விட்டது.
7.நெடன்யாஹு ஹமாஸை ISIS உடன் தொடர்புபடுத்தி பேசியுள்ளார். இது ஹமாசை பயங்கரவாதிகளாக சித்தரித்து அமெரிக்காவின் உதவியைப் பெறுவதற்கான முயற்சி.
8.நாம் துருக்கியின் நிலைப்பாட்டை ஆசிக்கிறோம். அம்மக்களுக்கும், துருக்கி தலைமைகளுக்கும் நன்றி கூறிக் கொள்கிறோம்.