குளிர் தண்ணீரில் குளிக்கும் சவாலை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வாரா?
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_781.html
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஐஸ் பக்கெட் சவால் விடுக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் நோக்கில் உலகின் பல பாகங்களிலும் ஐஸ் பக்கெட் சவால் என்ற நிகழ்வு நடத்தப்படுகின்றது.
நபர் ஒருவர் பனிக்கட்டிகள் அடங்கிய குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் அவ்வாறு குளித்த நபர், அந்தப் போட்டிக்காக மற்றுமொருவருக்கு சவால் விடுக்க வேண்டும்.
அவ்வாறு சவால் விடுக்கத் தவறினால் குறித்த நபர் அறக்கட்டளைக்கு 100 டொலர்களை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு சவால்களையும் வெற்றி கொண்டால் அறக்கட்டளைக்கு பத்து டொலர்கள் செலுத்த வேண்டும்.
இதன் படி, தபால் தொலைதொடர்பு அமைச்சரின் மகளும் மேல் மாகாணசபை உறுப்பினருமான மல்சா குமாரதுங்க, இந்த ஐஸ் பக்கெட் குளியலை மேற்கொண்டுள்ளார்.
குளியலை மேற்கொண்ட மல்சா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர மற்றும் அமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.
நரம்பு சார் நோய் சிகிச்சைக்கு பணம் திரட்டும் நோக்கில் அமெரிக்காவில் இந்த அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வேறு சமூக நல நோக்கங்களுக்காக இந்தப் பணம் திரட்டப்படுகின்றது என சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.