ஞானசாரவைத் தொடர்ந்து தலாய்லாமா மீது பாய்ந்த ஓமல்பே சோபித தேரர்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_26.html
புலிகள் தலதா மாளிகை மீது தாக்குதல் நடாத்தியபோதோ புத்தகாய மீதான தாக்குதலின் போதோ எதுவும் பேசாத தலாய்லமா தற்போது இலங்கையில் பௌத்தர்கள் முஸ்லிம்களை தாக்குவதை நிறுத்த வேண்டும் என கோரியிருப்பது அவர் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதையே எடுத்துக்காட்டுவதாக கருத்து வெளியிட்டுள்ளார் கடும்போக்கு ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் ஒமல்பே சோபித்த தேரர்.
நேற்றைய தினம் எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் இலங்கை தற்போது போதைப்பொருள் விநியோக மையமாக மாறிவருவதாகவும் கன்டைனர்களில் போதைப்பொருள் கைப்பற்றப்படுகின்ற போதும் அதன் சூத்திரதாரிகள் கைதாவதில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: சோனகர்
நன்றி: சோனகர்