ஊவாவில் இன்றும் நாளையும் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை – தேர்தல்கள் திணைக்களம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_428.html
நாட்டில் நாளை நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சையை முன்னிட்டு, ஊவா மாகாணத்தில் தேர்தல் நடைபெறவுள்ள இரு மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தேர்தல்கள் திணைக்களம் தடைவிதித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தினால் சகல கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் முதல் நாளை பிற்பகல் 2.00 மணி வரை இந்த பிரச்சாரத் தடை அமுலில் இருக்கும்.
இக்காலப்பகுதிக்குள், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது, கூட்டங்களை நடாத்துவது, இசைக் கச்சேரிகளை நடாத்துதல் உட்பட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் தடையாக அமையும் சகல செயற்பாடுகளும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.