பெரும் திரளான பௌத்த பிக்குகள் கலந்துகொண்ட நேற்றைய அகுரனை ஜும்மா பயான்

http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_105.html
அக்குறணை அஸ்னா மத்திய பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைவர் சட்டதரணி அஸ்மி பாரூக் உற்பட பரிபாலன சபை இந் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர்.
இனங்களுக்கு இiயில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு அசய்யப்பட்டிருந்த இன் நிகழ்வு , கலந்து கொண்ட அனைத்து தேரர்களினதும் பாராட்டுக்கு உள்ளாகியது.
காலை 11 மணி அளவில் பள்ளிசாலுக்கு சமூகம் தந்த தேரர்களை வரவேற்று அவர்களுக்காக பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தான உணவு பரிமாரப்பட்டது.
அதன் பின் அவர்களுக்காகவே விஷேடமாக சிங்கள மொழியில் மவ்லவி கலீலுல் றஹ்மாண் அவர்கள் ஆற்றிய குத்பா பிரசங்கத்தையும் செவிமடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்து.
மத்திய மாகாண சபை உறுப்பினர்களான குனதிலக்க ராஜபக்ஷ, எஸ்.எம்.பீ.;த அல்விஸ் அக்குறணை பிரதேச செயலாளர் மாதவ வர்னகுலசூரிய மற்றும் அலவத்துகொடை பொலீஸ் அதிகாரிகள் உற்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.