இஸ்ரேலுக்கு ஆதரவாக பாரிய ஆர்ப்பாட்டத்திற்குத் தயாராகும் பொது பல சேனா
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_495.html
நாளை (13) தெளஹீத் ஜமாத்தினர் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்த ஆயத்தமாகும் வேளை, குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறின் நாமும் இஸ்ரேலுக்கு ஆதரவாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்போம் என பொது பல சேனா கூறியுள்ளது.
அத்துடன் "இது இனம் ஒன்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இல்லை எனப் பூசி மெழுகும் பொது பல சேனா இஸ்ரேலில் 20,000 இலங்கையர்கள் பணி புரிவதாகவும் யுத்த காலங்களில் இஸ்ரேல் இலங்கைக்கு உதவியதாகவும் அதன் காரணமாகவே தாம் ஆர்ப்பட்டம் நடத்த இருக்கிறோம்" என பொது பல சேனா கூறியுள்ளது. இதனை பொது பல சேனா அமைப்பின் திலந்த விதானகே உறுதிப்படுத்தியுள்ளார்.
பொது பல சேனா இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுப்பின் உலகமே இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் இஸ்ரெலுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தும் நாடாக இலங்கை மாறும் அதே நேரம் வெளிப்படையாகவே யுத்தக் குற்றம் புரிந்துள்ள இஸ்ரேலுக்கு துணைபோகும் நாடுகளின் பட்டியலிலும் இலங்கை இடம்பிடித்துவிடும்.
சிறீ லங்கா தெளஹீத ஜமாத் இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் எனவும் பொது பல சேனா கூறியுள்ளது.