இனவாதத்தை தூண்டும் ஞானசார குழுக்களை இல்லாதொழிக்க வேண்டும் – வாசுதேவ
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_523.html
இனவாதத்தை தூண்டும் பொதுபல பல சேனாவின் ஞானசார தேரரின் குழுக்களை இலலாதொழிக்க வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
1953ம் ஆண்டு ஹர்த்தாலை நினைவு கூர்ந்து கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
ஞானசார குழு போன்ற இனவாத மதவாத குழுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பங்களிப்பு செய்ய வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாடு தழுவிய ரீதியில் பாரியளவில் போராட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும்.
இடதுசாரி கட்சிகளின் போராட்டமாக அமையாது மக்களின் போராட்டமாக அமைய வேண்டும். மக்கள் செயற்பாடுகளின் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் காணப்படும் இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போதே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய முடியுமென வலியுறுத்தியுள்ளனர்.
இடதுசாரி கட்சிகளின் சிரேஸ்ட தலைவர்களான டியூ.குணசேகரஇ வாசுதேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்