மின்சாரம் தாக்கியதில் இளைஞன் வபாத் - வெலிகமையில் சம்பவம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_316.html
வெலிகம கல்பொக்கை ஜின்னா வீதியிலுள்ள கடை ஒன்றில் பெயின்ட் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 21 வயதான இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்துள்ளார்.
வெலிகாமம் கோட்டகொடையைச் சேர்ந்த இன்பாஸ் என்ற இளைஞனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று மாலை சுமார் 5.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர் குறித்த கடையின் கூரை மேல் ஏறி பெயின்ட் அடிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்ததாகவும் திடீரென்று மேலே பாரிய சத்தம் கேட்டதாகவும் மேலே சென்று பார்த்த போது அவர் கூரை மேல் வீழ்ந்து கிடந்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அவருடன் வேலை செய்யும் இன்னொருவரையும் மின்சாரம் தாக்கியுள்ளதுடன் அவர் அதிஷ்டவசமாக பிரச்சினைகள் எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளார்.
கடைக்கு அருகில் உள்ள ட்ரான்ஸ்போமருக்கு வரும் உயர் மின்னழுத்தத்துடனான பிரதான கம்பியினூடாகவே மின்சாரம் இவர் மீது பாய்ந்துள்ளது.