சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் இயல்புநிலை பாதிப்பு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_655.html
சுகாதார ஊழியர்களின் பிரச்சினை தீர்வு வழங்காமைக்கு இரண்டு தொழில் சங்கங்கள் சேர்ந்து இன்று முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டன.
இதற்கமைய அகில இலங்கை சுவசேவை சங்கம் மற்றும் சுகாதார சேவை ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் இப்பணிப்பகிஷ்கரிப்பை மேற் கொண்டன. இதன் காரணமாக 50 ஆயிரமளவிலான வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.
மேலும், இப்பணிப்பகிஷ்கரிப்புக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி, களுபோவில, பேராதனை, கராப்பிட்டிய, காலி, நுவரெலியா உள்ளிட்ட நாடளாவிய அனைத்து வைத்தியசாலைகளிலும் இப்பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக அனைத்து வைத்தியசாலைகளின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரும் அவதியுற்றனர்.
அது மாத்திரமன்றி நோயாளர்களின் சிரமங்களை போக்குவதற்கு இராணுவ படையினர் கடமையில் ஈடுபட்டமை பெரும்பாலான வைத்தியசாலைகளில் காணக்கூடியதாக இருந்தது.