எகிப்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் குழப்பம் - காஸா மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் அனுமதி
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_678.html
எகிப்தில் நடைபெற்ற இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைதிப் பேச்சுவார்த்தை குழப்பத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து சற்றுமுன் காஸா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
யுத்த நிறுத்த காலத்தில் காஸாவில் இருந்து மூன்று ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலால் முன்வைக்கபட்ட குற்றச்சாட்டை அடுத்து இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேத்தன்யாகு இஸ்ரேல் இராணுவத்திற்கு காஸா மீது தாக்குதல் நடத்த கட்டளை இட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெறும் தாக்குதலால் காசாவில் இதுவரை 2000 பேர்வரை கொல்லப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் ரபா விமான நிலையத்திற்கு அருகில் நடந்த தாக்குதலால் இரண்டு சிறுவர்கள் காயமடைந்ததாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்தது