ஆறு மாத குழந்தையை விற்க முயன்ற பெண்கள் இருவர் கைது
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_684.html
ஆறு மாதப் பெண் பிள்ளை ஒன்றை விற்க முயன்ற பெண்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த் குழந்தையை 30,000 ரூபாவிற்கு விற்க முயற்சி செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குழந்தையின் தாய் ஆவார். அடுத்தவர் குழந்தையை வாங்க வந்தவராவார் என பொலிஸார் கூறினர்.
சப்புகஸ்கந்த பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பெண்கள் இருவரும் ஹ்ங்வல்லையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இரு சந்தேக நபர்களும் மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.