பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவன் மீது கத்திக்குத்து!
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_717.html
அம்பலான்கொட ஸ்ரீ தேவானந்தா வித்தியாலயத்தில் உயர் தரப் பரீட்சை எழுதிவிட்டு, வீடு சென்று கொண்டிருந்த மாணவன் ஒருவன் இன்று பிற்பகல் இனந்தெரியாத நபர்களின் கத்திக் குத்துக்கு இலக்காகி பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
மாணவனின் நெஞ்சுப் பகுதி கத்திக் குத்தினால் காயப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவன், சத்திர சிகிச்சை ஒன்றுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.