சப்ரகமுவ பல்கலைக்கழக வளாகத்தில் இன்வாதப் போஸ்டர்கள்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_73.html
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் இனந்தெரியாத 5 பேரினால் தாக்குதலுக்குள்ளாகி பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைகழக வளாகத்தில் “தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு இங்கு இடமில்லை… மீறியும் வந்தால் கொலை செய்வோம்… மாணவிகள் என்றால் கற்பழிப்போம்…” என்கிற பொருள்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக த கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் கொச்சை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்ததாகவும், மாற்றுமொழிக்காரர்களே இதை எழுதியிருக்கக்கூடும் என ஊகிக்க முடிவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த பளையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் என்ற மாணவனையே இனந்தெரியாத கும்பல் நேற்று அதிகாலை விடுதிக்குள் நுழைந்து தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் தீவிர விசாரணையினை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.