கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் நடத்திய கூட்டத்துக்கு இடயூறு விளைவிக்கப்பட்டமைக்குக் கண்டனம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_5.html
அமெரிக்க தூதரக அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த கூட்டம், ஆட்டப்பாட்டக்காரர்கள் சிலரால் இடைநடுவே நிறுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் யுத்தத்தினால் காணாமற் போனவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் அவர்களின் தகவல்களை சிவில் சமூக குழுக்களுக்கும், தூதரக சமூகத்திற்கும் தெரியப்படுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த குழுவினர் உள் நுழைந்து, இடையூறு ஏற்படுத்தியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவாட்சியை பலப்படுத்தி, இலங்கையிலுள்ள அனைத்து பிரஜைகளினதும் கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளுக்கு இடமளிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வடக்கில் இருந்து வருகைத்தந்த குடும்பத்தவர்கள் கொழும்பிலும், தமது சொந்த இடங்களுக்கு திரும்பிய பின்னரும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கோருவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. - NF