ஐ.நா.பாதுகாப்புச் சபை மீது நவீபிள்ளை குற்றச்சாட்டு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_770.html
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை,ஐ.நா.பாதுகாப்புச் சபை முழு வீரியத்துடன் அன்றி அசமந்த நிலையில் இயங்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பாதுகாப்புக் கவுன்சிலுக்கு உள்ள அதிகாரத்துக்கும்,ஆளுமைக்கும் அமைய, சர்வதேச ரீதியாக ஆயிரக்கணக்கான மனித உயிர்களையும்,உடைமைகளையும் பாதுகாக்கும் தகுதியிருந்தும் அதன் மந்தநிலைச் செயற்பாட்டில் சகலமும் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும்,இதன் காரணமாகவே சர்வதேசம் மீதான அச்சம் அற்றுப்போய் சில நாடுகள் தாம் நினைத்த போக்கில் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.