இரத்தினபுரியில் மனித எச்சங்கள் மீட்பு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_831.html
மண்டை ஓடு ஒன்றும் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட மனித எச்சங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
பொலிஸ் அவசர அழைப்பு இலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன
மனித எச்சங்களுடன், ஆடைகளும் சவப்பெட்டிக்கு பயன்படுத்தப்படும் துணிவகைகளும் குறித்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
குறித்த மனித எச்சங்கள் ஆற்றில் அடித்துவரப்பட்டதா அல்லது கொண்டுவந்து போடப்பட்டதா என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை
மேலதிக விசாரணைகளை கஹவத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.