நரகத்தின் வாயிலை திறந்திருக்கும் இஸ்ரேல் - கஸ்ஸாம் படையணி

இஸ்ரேல்-காசாவுக்கு இடையிலான யுத்த நிறுத்தம் முறிவடைந்ததை அடுத்து இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் ஆயுதப் பிரிவு தளபதி மொஹமத் தைப்பின் மனைவி மற்றும் குழந்தை கொல்லப்பட்டுள்ளனர். காசாவெங்கும் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் ஒரே குடும்பத்தின் ஏழு பேர் உட்பட மேலும் பல பலஸ்தீனர்களை கொன்றுள்ளது.

"இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்கள் பொய்க் காரணம் கூறி ஹமாஸ் மூத்த ஆளுமை ஒருவரை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது" என்று ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மூஸா அபு+ மர்சூக் நேற்று புதன்கிழமை காலை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
"இந்த சிறந்த தலைவரின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த வான் தாக்குல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மொஹமத் தைப் உயிர் தப்பியதை கெய்ரோவில் இருக்கும் மூஸா அபு+ மர்சூக் உறுதி செய்தார்.

இஸ்ரேலின் தேடப்படுவோர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தைப் பலமுறை படுகொலை முயற்சிகளில் இருந்த உயிர் தப்பியுள்ளார். இவ்வாறான தாக்குதல்களால் உடல் குறைபாடுகளுக்கு உள்ளான நிலையிலேயே காணப்படுகிறார். இஸ்ரேல் உள்துறை அமைச்சர் கிடியோன் சார், இராணுவ வானொலிக்கு அளித்த பேட்டியில், தைப் தமது முக்கிய இழக்கு என்றும் அவரை அழிக்க வாய்ப்பு கிடைக்கு மானால் அதனை கட்டாயம் எடுத்துக் கொள்வோம் என்றும் குறிப்பிட்டார்.

ஹமாஸ் ஆயுதப்பிரிவான கஸ்ஸாம் படையணி வெளியிட்ட எச்சரிக்கையில், இஸ்ரேல் நரகத்தின் வாயிலை திறந்திருப்பதாகவும் இதற்கு மோசமான விலைகொடுக்க வேண்டிவரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மாத்திரம் காசாவில் 25 க்கும் அதிகமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனினும் அது குறித்து எந்த விரிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை. செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் பெண் ஒருவரும் இரண்டு வயது பெண் குழந்தை ஒன்றும் கொல்லப்பட்டனர்.

இது கடந்த ஓகஸ்ட்; 10 ஆம் திகதிக்கு பின் காசாவில் இஸ்ரேலின் முதல் உயிர்ப்பலி தாக்குதலாக இருந்தது. தொடர்ந்து தெற்கு காசாவின் டையிர் அல் பலாஹ்வில் இஸ்ரேல் யுத்த விமானங்கள் போட்ட குண்டுகளில் கர்ப்பிணிப் பெண் ஒருவர், மூன்று குழந்தைகள் மற்றும் இரு ஆண்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களாவர். கொல்லப்பட்ட பெண் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் கருவில் இருந்த சிசுவையும் காப்பாற்ற முடியாமல் போனது என்றும் அவசர சேவைப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதலில் மேலும் எட்டுப் போர் காயமடைந்திருப்பதோடு அவர்கள் அனை வரும் அல் அக்சா மருத்துவனைக்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ளனர். இதில் புதன் கிழமை காலை நடத்தப்பட்ட தாக்குதல்களில் காசா நகரில் அல் தலுல் என்பவரின் தரைமட்டமாக்கப்பட்ட வீட்டில் இருந்து 14 வயது சிறுவன் உட்பட இருவரது உடல் மீட்கப்பட்டது. தவரி அல் சைதூன் பகுதியில் இஸ்ரேல்  தாக்குதலுக்கு இலக்கான இரண்டு வயது குழந்தையின் உடல் மீட்கப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் கித்ரா குறிப்பிட்டார். இதன்படி கடந்த செவ்வாய்க் கிழமை யுத்த நிறுத்தம் முறிவடைந்ததன் பின் இஸ்ரேல் நாடத்திய தாக்குதல்களில் மொத்தம் 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட் டுள்ளனர்.

கடந்த ஜ{லை 8 ஆம் திகதி ஆரம்பமான காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண் ணிக்கை தற்போது 2,036 ஆக உயர்ந்துள் ளது. இந்த மோதல்களில் இஸ்ரேல் தரப்பில் 64 இராணுவத்தினர் உட்பட மொத்தம் 67 பேர் கொல்லப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப் பட்ட 24 மணிநேர யுத்த நிறுத்தம் அன்றைய தினம் பிற்பகலிலேயே முறிவடைந்தது. யுத்த நிறுத்த மீறலுக்கு இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம் சுமத்துகின்றன.

அல் கஸ்ஸாம் படையணி வெளியிட்ட அறிவிப்பில் செவ்வாய்க்கிழமை முழுவதும் இஸ்ரேல் மீது 34 ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது. இவை தலைநகர் டெல் அவிவ் மற்றும் தெற்கு நகரான பீர்'வா வரை சென்று தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் காசாவிலிருந்து வந்த ரொக்கெட் தாக்குதல்கள் சுமார் 50 என கணக்கு கூறியிருக்கும் இஸ்ரேல் இராணுவம், பாதிப்புகள் பற்றி எந்த விபரமும் அளிக்கவில்லை.

"டெல் அவிவ் பெருநகரப் பகுதியின் திறந்த வெளியில் ரொக்கெட் ஒன்று விழுந்தது" என்று குறிப்பிட்ட இஸ்ரேல் இராணுவம் இரு ரொக்கெட்டுகள் பீர்N'வா வுக்கு அருகில் விழுந்ததாகவும் உறுதி செய்தது. இந்த பகுதில் சுமார் 200,000 இஸ்ரேலியர்கள் வாழ்கின்றனர். nஜரூசலம் மீதும் ரொக்கெட் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அறிவித்த நிலையில் அந்த பகுதியிலும் சைரன் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் திறந்த வெளியில் ரொக்கெட் ஒன்று விழுந்ததாக இஸ்ரேல் பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.

எனினும் மேற்கு ரமல்லாஹ்வில் இஸ்ரேலின் சட்டவிரோத யு+தக் குடியிருப்பு பகுதியில் நான்கு ரொக்கெட்டுகள் விழுந்து பாரிய தீமூட்டம் எழுந்ததை சம்பவத்தை நேரில் கண்டவர்கள் உறுதி செய்துள்ளனர். ரொக்கெட் விழுந்த பகுதிகளுக்கு அம்பு+ லன்ஸ் வண்டிகள் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். சட்டவிரோத குடியேற்ற பகுதியில் இருந்து தீமூட்டம் எழுந்ததாகவும் ரமல்லாஹ்வின் இஸ்ரேல் குடியேற்ற பகுதிகளில் சைரன் ஒலி எழுந்தவண்ணம் இருந்ததாக வும் பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றுக்காலையில் காசா வில் இருந்து இஸ்ரேல் மீது மேலும் 20 ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள் ளன. முன்னதாக காசா மீது புதிய வான் தாக்குதலை நடத்த உத்தரவிட்ட இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு எகிப்தின் மத்தியஸ்தத்தில் கெய்ரோவில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் பிரதிநிதிகளையும் நாட்டுக்கு திரும்ப அழைத்தார். "ரொக்கெட் தாக்குதல்கள் யுத்த நிறுத்தத்தை முறித்ததோடு கெய்ரோ வில் பேச்சுவார்த்தை மூலம் போடப்பட்ட அத்திவாரத்தையும் தகர்த்தது" என்று நெதன்யாகுவின் பேச்சாளர் மார்க் ரிகேவ் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.

"எகிப்தின் சமரச முயற்சி ஒட்டுமொத்த மான மற்றும் நிபந்தனையற்ற யுத்த நிறுத்தத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப் பட்டது. இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம் அது தெளிவாக மீறப்பட்டிருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.கெய்ரோவில் இஸ்ரேலுடன் மறைமுக சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த பலஸ்தீன பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அஸ்ஸாத் அல் அஹமத் தமது குழு நாடு திரும்பவிருப்பதாக நேற்று தெரிவித்தார். "நாம் நாடு திரும்புகிறோம். ஆனால் நாம் பேச்சுவார்த்தையை கைவிடவில்லை" என்றார். இஸ்ரேலின் சமரச முன்மொழிவுக்காக பலஸ்தீனர்கள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"இஸ்ரேல் பதிலளிக்கும்வரை நாம் (கெய்ரோவுக்கு) திரும்பி வரப்போவதில்லை" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  கெய்ரோ சமரச பேச்சையொட்டி யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டதால் காசாவில் கடந்த ஒன்பது தினங்கள் அமைதி நீடித்து வந்தது. "பலஸ்தீன மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் இஸ்ரேலால் தமது பாதுகாப்பை நீண்ட காலத்திற்கு அனுபவிக்க முடியாது" என்று ஹமாஸ் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான இஸ்ஸத் அல் ரஷ்க் எச்சரிக்கை விடுத்தார்.

எவ்வாறாயினும் யுத்த நிறுத்த முறிவுக்கு இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா ஹமாஸ் மீது குற்றம் சுமத்தி யுள்ளது. "காசாவின் பாதுகாப்பிற்கு ஹமாஸே பொறுப்புக் கூற வேண்டும். காசா வில் இருந்தே ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன" என்று குற்றம் சுமத்தி னார் அமெரிக்க இராஜhங்கத் திணைக் களத்தின் பேச்சாளர் மெரியா ஹார்ப்.

இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் மீண்டு ஆரம்பிக்கப்பட்டிருப்பது காசா மக்களுக்கு இடையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து காசா நகரின் கிழக்கு பிரதேசமான '{iஜ யாவில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர். முன்னர் இந்த பகுதி மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான n'ல் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அதேபோன்று செய்தூன் மற்றும் 'hப் பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

Related

சர்வதேசம் 2379547127317515582

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item