ஜனாதிபதி செயலகத்திற்குத் திருப்பி ஒப்படைக்கப்படாத வாகனங்கள் பற்றி விசாரணை

http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_99.html

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல வாகனங்கள் பல்வேறு இடங்களில் பாகங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறியக்கிடைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆகையால் இதுவரை ஒப்படைக்கப்படாத வாகனங்கள் இருந்தால் அவற்றை உடனடியாக ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான விசாரணையை ஜனாதிபதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.