முஸ்லிம்களின் உள்விவகாரத்தில் பொதுபல சேனா தலையிடாது – டிலந்த விதானகே
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_977.html
முஸ்லிம் சமூகத்தின் உள்விவகாரத்தில் நாம் தலையிடமாட்டோம் என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்தார்.
ஹஜ் கோட்டாப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க தலையிடுமாறு பொதுபல சேனா அமைப்பிடம் ஹஜ் முகவர் அமைப்பொன்று இன்று வேண்டுகோள் விடுத்தபோதே அம்முகவர் அமைப்பிடம் பொதுபல சேனா இவ்வாறு கூறியதாக அதன் நிறைவேற்று அதிகாரி எமது டெய்லி சிலோனிடம் குறிப்பிட்டார்.
நீதிமன்றம் சென்ற ஹஜ் முகவர் அமைப்பு இன்று காலை பொதுபல சேனாவுடன் விசேட சந்திப்பொன்றை ராஜகிரியவிலுள்ள பிரத்தியேக இடமொன்றில் நடாத்தியுள்ளது. இதில் பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி உட்பட முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஹஜ் கோட்டா விடயத்தில் தமக்கு அநீதமிழைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பொதுபல சேனா தலையிட்டு நீதியைப் பெற்றுத் தருமாறும் தம்மிடம் அந்த முகவர் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்தனர். நீதி மன்ற உத்தரவை மீற முடியாது எனவும் அதற்குக் கட்டுப்பட்டு நடக்குமாறும் நாம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினோம்.
இருப்பினும், அவர்களின் முறைப்பாடு குறித்து எம்மால் முடியுமான நடவடிக்கைகளை அடுத்து வரும் நாட்களில் ஆராயவுள்ளதாகவும் அவர் எமது செய்திச் சேவையிடம் மேலும் கூறினார்