பாகிஸ்தானை ராணுவம் கைப்பற்றும் அபாயம் ; இம்ரான்கானுக்கு அழைப்பாணை

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை பதவி விலகக்கோரி போராட்டம் நடத்திவரும் இம்ரான்கான், தாஹிர் ஆகியோருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகக்கோரி, முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப், மதத் தலைவர் தாஹிர் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் ஆகிய இரு கட்சிகளும் தொடர்ந்து  6–வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே நவாஸ் ஷெரீப் அரசுக்கு நெருக்கடி அளிக்கும் விதத்தில் இம்ரான்கான் கட்சி எம்.பி.க்களும், மாகாண சட்டசபை எம்.எல்.ஏ.க்களும் பதவி விலக முடிவு செய்தனர்.
தொடர்ந்து அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராணுவம்  ஆட்சியை கைப்பற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் போராட்டத்தால் நவாஸ் செரீப் ஆட்சிக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

போரட்டத்தில் ஈடுபட்டு உள்ள தொண்டர்கள் மத்தியில் பேசிய இம்ரான்கான், நவாஸ் செரீப் இன்று மாலைக்குள் பதவி விலக வேண்டும். அவ்வாறு பதவி விலகாவிட்டால் பிரதமரின் அதிகாரபூர்வ அலுவலக இல்லத்துக்குள் தொண்டர்களுடன் நானும் நுழைவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்க நவாஸ்செரீப் மறுத்து விட்டார். இம்ரான்கான் மிரட்டலை தொடரந்து பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டிற்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  இமரான்கான் மற்றும் தாஹிர் உல் காதிரி ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்த நவாஸ் ஷெரிப் சம்மதம் தெரிவித்தார். 

இன்று அதிகாலையிலே இம்ரான்கான் ஆதரவாளர்கள் அந்நாட்டு பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அனைத்து அரசு அலுவலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே போராட்டம் நடத்திவரும் இம்ரான் கான், தாஹிர் உல் காதிரி ஆகியோருக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பதில் அளிக்க அவர்கள் இருவரும் நாளை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

Related

சர்வதேசம் 8156805234545640036

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item