முக மூடி நிகழ்ச்சியில் நடைபெற்ற தஃவாவை பார்க்கத்தவறிய துரதிஸ்டசாலியா நீங்கள்.??
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_979.html
நேற்றிரவு 9 மணியளவில் வசந்தம் அலைவரிசையில் ஒளிபரப்பான முக மூடி நிகழ்ச்சியில் சசியாக திரைப்படத் துறை ஜாம்பவான்களில் ஒருவராக மிளிர்ந்து இஸ்லாத்தின் ஏற்பால் அவ்ப் என தனது பெயரை மாற்றிக்கொண்டது மாத்திரமின்றி தனது பிழையை உணர்ந்து தனது துறையை ஒரு பொருட்டாகவே கணக்கு எடுக்காது இஸ்லாத்திற்காக தூக்கி வீசிய அவ்ப் அவர்களே கலந்து கொண்டார்கள்.
அண்மையில் யுவன் சங்கராஜா அவர்கள் இஸ்லாத்தை தழுவியதாக தனது twitter இல் பிரபலப்படுத்திய போது இஸ்லாத்திற்கு மாற்றமான தனது இசைத்துறையை விட்டு விலகுவாரா ? என இஸ்லாமிய எதிரிகள் பலர் கேள்வி எழுப்பினர்.இவர்களின் கேள்விக்கு "இஸ்லாத்தை உண்மையாக அறிந்து இஸ்லாத்தை ஏற்போர் நிச்சயம் அவ்வாறான வற்றை விட்டு விலகுவர் " என தனது பேச்சின் மூலம் தெளிவாக எடுத்துரைத்தார் அவ்ப்.
"பெயர்,புகழ் அதிகம் சம்பாதிக்கக் கூடிய,சம்பாதித்துக் கொண்டிருந்த திரைப்படத் துறையை விட்டு உங்களை மாற வைத்த காரணி எது? " பல தடவை விடுத்து விடுத்து குறித்த நேர்காணல் செய்தவர் கேட்ட போதும் "இஸ்லாத்தை உண்மையாக ஏற்றதன் விளைவே"என தெளிவாக பதிலுரைத்தார் அவ்ப்..
அவ் நேர்கானளிற்கு தனது மகனை ஒரு ஹாபிழாக அறிமுகப்படுத்திய போது ஒரு ஈமானிய கர்வத்தை அவரது முகத்தில் காணக் கிடைத்தது,தனது மகன் சில நாட்கள் முன்பு தராவீஹ் தொழுவிக்க ஆஸ்திரேலிய சென்று வந்தார் என அவர் கூறிய போது "தான் இப் பிள்ளையைப் பெற்ற தந்தை என்ற ரீதியில் எவ்வளவு நன்மையை அல்லாஹ் எனக்கு தருவான் " என்ற எண்ணங்களின் பிரதி பலிப்புக்கள் அவர் முகத்தில் ஜொலிக்க காணப்பட்டது .
"தந்தை,தான் இஸ்லாத்திற்காக பிரபலமான துறையை தூக்கி எறிந்தார்.தந்தையின் இச் செயற்பாட்டால் பிள்ளைகள் தங்கள் தந்தை மதிப்பிழந்து விட்டாரே! "என நினைக்கின்றார்களோ! என அங்கே வருகை தந்த அவரது மகன் செய்தவர் அப்துர் ரஹ்மானிடம் குறித்த நேர்காணல் செய்தவர் கேட்ட போது ,தனது தந்தை ஒரு நடிகராக இருந்த காலத்தை எண்ணி கவலைப்படுவதாக பதிளழித்து ஒரு கனம் பார்த்தோரை மெய் சிலுக்கச் செய்தார்.
குறித்த நேர்காணல் செய்தவர் அப்துர் ரஹ்மானிடம் உங்கள் தந்தையின் நடிப்புக்களை பார்த்துள்ளீரா ? என கேட்ட போது மழுப்பும் விதமாக பதிலழித்த அப்துர் ரஹ்மானை விடாது கேள்வி தொடுத்த குறித்த நேர்காணல் செய்தவர் உங்கள் தந்தையுடன் சேர்ந்து அவர் நடித்தவைகளை நீங்கள் பார்த்துள்ளீரா என மீண்டும் கேள்வி தொடுத்தார்.அதற்கு அப்துர் ரஹ்மான் அளித்தே பதில் என்ன தெரியுமா?
"தந்தையுடன் இணைந்து அப்படி பார்க்க மாட்டோம்"எனக்கூறி தங்களது இஸ்லாமிய அஹ்லாகை உலகிற்கு வெளிப்படுத்தினார்கள்.
இதன் போது குறுக்கிட்ட அவரது தந்தை "தங்கள் வீட்டில் t .v இல்லை"என்பதை வெளிப்படுத்தினார்.
குறித்த நேர்காணல் செய்தவர்
அப்துர் ரஹ்மான் கலையகம் வந்து உட்கார்ந்ததும் "தனது முகத்தை கலையக கமராவிற்கு காட்ட மறுப்பதாக "கூறி அப்துர் ரஹ்மானின் பக்குவத்தை மக்களிற்கு வெளிப்படுத்தினார்.
ஆங்கிலம் நன்கு தெரியாதவர்கள் கூட தாங்கள் கதைக்கும் போது இடை இடையே ஆங்கிலம் பயன் படுத்தி நாகரீகமாக கதைக்கிறார்களாம் என்று கதைக்கும் இக்காலத்தில்,ஆங்கிலம் நன்கு தெரிந்தும் தமிழ் பூரணமாக தெரியாத போதும் ஆங்கில வார்த்தை எதனையும் பயன்படுத்தாது தழிலில் திக்கு முக்காடி கதைத்த அவரது அழகிய பண்பை நேர்காணல் செய்தவரே வாழ்த்தினார்.
அந் நிகழ்வில் நடைபெற்ற அனைத்தையும் என்னால் கூறி விட இயலாத போதும் சிலவற்றை வரைந்துள்ளேன்.
உண்மையில் அந் நிகழ்வை பார்க்கத் தவறியவர்கள் துரதிஸ்ட சாலிகளே!