கவுதமாலா ராணுவத் தளபதி ஹெலி விபத்தில் பலி!
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_989.html
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவின் ராணுவத் தளபதி ரூடி ஆர்டிஸ் இன்று காலை ஹெலி விபத்தொன்றில் பலியாகியுள்ளார்.
இவர் ராணுவ அதிகாரிகள் சிலருடன் அங்குள்ள கென்டனஹோ மலை பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்ற வேளை மோசமான வானிலை நிலவியதோடு. அதில் சிக்கி ஹெலிகாப்டர் மலை பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இதில் ராணுவ தலைமை தளபதியும், அவருடன் சென்ற 4 அதிகாரிகளும் பலியானார்கள்.
தளபதி ரூடி ஆர்டிஸ் 31 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
தளபதி ரூடி ஆர்டிஸ் 31 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடம் போதை மருந்து கும்பல் ஆதிக்கம் உள்ள பகுதியாகும். எனவே போதை மருந்து கும்பல் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என கருதப்பட்டது.
ஆனால் மோசமான வானிலையால்தான் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.